முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை நகை கடையில் கொள்ளை: போலீசார் 2-வது நாளாக விசாரணை

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
Police 2023 06 14

Source: provided

கோவை : கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் இரண்டாவது நாளாக நேற்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவ.27-ம் தேதி இரவு 200 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.  இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தனிப்படை பாலக்காடு பகுதியிலும், மற்றொரு தனிப்படை பொள்ளாச்சி பகுதியிலும் முகமிட்டுள்ள நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடையில் பதிவாகியுள்ள கைரேகைகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய பொழுது இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளிகள் கிடையாது என்பது தெரியவந்துள்ளது.  மேலும், நகைகளை தேர்வு செய்து திருடி இருப்பதால்  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புதிய கொள்ளையராக இருப்பார் என்பதும் விசராணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து