முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் வாரிசாக சகோதரர் மகனை அறிவித்தார் மாயாவதி

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      இந்தியா
Mayavati 2023-12-10

Source: provided

லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். 

வரும் மக்களவைத் தேர்தலுக்கு  தயாராவது குறித்து ஆராய்வதற்காக மாயாவதி தலைமையில் நேற்று நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்தில் அவர் இதனை அறிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு தனது சகோதரர் ஆனந்த் குமாரை தேசியத் தலைவராகவும், மருமகன் ஆகாஷை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் மாயாவதி நியமித்தார். 28 வயதாகும் ஆகாஷ் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்குள் நுழைந்தார். அதற்கு முன் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் தனது அத்தையுடன் இணைந்து காணப்பட்டார். 

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த உதய்வீர் சிங் கூறுகையில்,

பகுஜன் தலைவர் மாயாவதி தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார். ஆகாஷ் ஆனந்த் கட்சியின் நிலையையும், கட்சி பலவீனமான இடங்களில் சரி செய்யும் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் கட்சியை மாயாவதியும், மற்ற மாநிலங்களில் ஆகாஷ் ஆனந்தும் வழிநடத்துவார் என மாயாவதி தெரிவித்தார் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து