எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Vashington-Sunder 2023-02-2](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/02/28/Vashington-Sunder_2023-02-2.jpg?itok=w9WvPZ1M)
Source: provided
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிரதேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.மும்பை அணிக்கு எதிரான அரையிறுதியில் தமிழ்நாட்டின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து விளையாடுகிறார் . அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்.
________________________________________________
தந்தையான கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் மூன்றாவது முறையாக தந்தையானார். வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்சன் தனது மனைவி சாரா ரஹீம் மற்றும் புதிதாக பிறந்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவின் தலைப்பில் " இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்" என தெரிவித்தார்.
கேன் வில்லியம்சன் - சாரா ரஹூமுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். கேன் வில்லியம்சன் - சாரா ரஹூம் தம்பதிக்கு 2019 -ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பெயர் மேகி. இவருக்கு வயது 3. இரண்டாவதாக கடந்த 2022-ல் மகன் பிறந்தார். அவருக்கு தற்போது ஒரு வயது என்பது குறிப்பிடத்தக்கது.
________________________________________________
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அணியில் ஸ்டீவ் சுமித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணி விவரம்; ஸ்டீவ் சுமித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்க்ர்ட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
________________________________________________
குல்தீப் யாதவிற்கு சேவாக் ஆதரவு
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிலேயே குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;-
"மிகைப்படுத்துதல் என்று வரும்போது குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக மிகைப்படுத்தப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு இப்போதும் ஆன்லைன் பேன்ஸ் கிளப் இல்லை. அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை. மக்கள் யாரும் இவர்தான் அடுத்த பெரிய ஸ்டார் என்று கொண்டாடியதில்லை. என்னைக் கேட்டால் தற்போது பெறுவதை விட அவர் அதிக பாராட்டு மற்றும் மிகைப்படுத்தலுக்கு தகுதியானவர்" என்று பதிவிட்டுள்ளார்.
________________________________________________
இங்கிலாந்து அணி குறித்து மெக்கல்லம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை தொடர்ந்து இந்திய தொடரிலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக மெக்கல்லம் கூறியுள்ளார். ஆனால் 18 மாதங்களுக்கு முன் சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவதற்கு தடுமாறிய இங்கிலாந்து அணி தற்போது பன்மடங்கு உயர்ந்து கடைசி 8 தொடர்களில் 4 வெற்றி 3 டிராவை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே தம்முடைய தலைமையில் இங்கிலாந்து அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பெருமிதத்தை வெளிப்படுத்தும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
"நாங்கள் இங்கே தோற்றுள்ளோம். 2 - 2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடர் டிரா ஆனது. ஆனால் 18 மாதங்களுக்கு முன்பிருந்த அணியை விட தற்போது நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். எனவே அடுத்த 18 மாதங்கள் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்கள் சில ஸ்பெஷலானதை சாதிப்போம். எங்களுடைய அணியில் இருக்கும் சில குறைகளை தொடர்ந்து நாங்கள் உளியை வைத்து சரி செய்கிறோம். இந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருப்பது மோசமல்ல" என்று கூறினார்.
________________________________________________
குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு
மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 110 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
________________________________________________
மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ வலியுறுத்துவது உண்டு. அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு. ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை ரஞ்சி டிராபியில் விளையாட பி.சி.சி.ஐ கூறியதாகவும், ஆனால் அவர் ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல் வெளியானது. இதனால் பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை என பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி
09 Feb 2025காலே, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது
09 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
வரும் 21, 22-ம் தேதிகளில் கடலூருக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வஞ்சிப்பது பா.ஜ.க.
-
தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவ, விமானப்படை தளபதிகள்
09 Feb 2025பெங்களூரு, கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் ஒன்றாக தேஜஸ் போர் விமா
-
அதிக வயதில் அறிமுகம்
09 Feb 2025இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
-
தமிழக மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதி பறிப்பு: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Feb 2025சென்னை, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதி பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் இரக்கமற்ற செயலில் மத்திய அரசு ஈடுபட
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை
09 Feb 2025பிஜாபூர், சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 31 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.18.63 கோடி மதிப்பில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Feb 2025திருச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்கா
-
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 38 பேர் திடீர் பணியிட மாற்றம்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
-
35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அச்சடிக்கும் பணி தீவிரம்
09 Feb 2025சென்னை, வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிரயாக்ராஜ் பயணம்
09 Feb 2025பிரயாக்ராஜ், உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்
-
ஆஸ்திரேலியா வெற்றி எதிரொலி:ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை
09 Feb 2025துபாய், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐ.சி.சி டெஸ்ட்
-
ஊழல் கட்சியாக மாற்றி விட்டார்: டில்லி தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
09 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல்
-
இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள் கைது
09 Feb 2025ராமேசுவரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டில் 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் பணம் வைத்து விளையாட தடை
09 Feb 2025சென்னை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
09 Feb 2025சென்னை, நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 4-வது முறையாக தீவிபத்து
09 Feb 2025பிரயாக்ராஜ், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 4வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
-
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா
09 Feb 2025இம்பால், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜினாமா செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-02-2025
10 Feb 2025 -
அமெரிக்காவில் இரும்பு - அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதிக்கு வரி அதிபர் அறிவிப்பு
10 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் இரும்பு- அலுமினியத்துக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார்.
-
மதுரை, பாலதண்டாயுதபாணி கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
10 Feb 2025மதுரை: அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அடையாளம் தெரியாமல் உருமாறி போன இஸ்ரேல் பிணைக்கைதிகள்
10 Feb 2025ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்த வாரம் வெளியாகும் ஒத்த ஓட்டு முத்தையா
10 Feb 2025கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா படம் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
-
86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Feb 2025சென்னை : தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழை, எளிய மக்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத
-
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Feb 2025சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.