முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கடலை மாவு அல்வா

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

கடலை மாவு அல்வா செய்யத்தேவையான பொருட்கள்.

  1. கடலை மாவு - 1/4 கிலோ.
  2. நெய் - 9 ஸ்பூன்.
  3. ரவை - 4 ஸ்பூன்.
  4. உப்பு - ஒரு சிட்டிகை.
  5. பால் - 50 மில்லி.
  6. சர்க்கரை - 1/4 கிலோ.
  7. பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை.
  8. ஏலக்காய் தூள் – சிறிதளவு.
  9. பாதாம் பருப்பு - 6.
  10. முந்திரி பருப்பு -10.

 

Method: 

செய்முறை ;--

அடுப்பில் கடாயை வைத்து 1/4 கிலோ கடலை மாவு மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கடலை மாவை நன்றாக வறுத்து தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து 5 ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானவுடன் வறுத்து வைத்துள்ள கடலை மாவு மற்றும் 4 ஸ்பூன் ரவையை போட்டு நன்றாக கிளறி விடவும்.

இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு 50 மில்லி பால் மற்றும் ஒரு டம்ளர்  தண்ணீர் ஊற்றி  நன்றாக கிளறி விடவும்.

இதனுடன் ஏலக்காய் தூள் சிறிதளவு,2 ஸ்பூன் நெய்,சர்க்கரை 1/4 கிலோ,பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகைபோட்டு நன்றாக கிளறி விடவும்.

இதனுடன் தூளாக்கிய 6 பாதாம் பருப்பு மற்றும் 10 முந்திரி பருப்பு போட்டு நன்றாக கிளறி விடவும்.

இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

சுவையான கடலை மாவு அல்வா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago