முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் ஜவஹர் பவன் உள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வாழ்த்து கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, 

இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. 

தமிழகத்தில் தற்போது ஓ.பி.சி., எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்டோருக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50 சதவீதம்  இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5 சதவீத  இடஒதுக்கீடு அண்மையில் வழங்கபட்டுள்ளது. 

மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி/எஸ்.டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து