முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய ஆக. 10-ம் தேதி வரை ஆம் ஆத்மிக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடில்லி, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய, ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லி உயர் நீதிமன்ற வளாக விரிவாக்கத்துக்காக, தற்போது ஆம் ஆத்மி அலுவலகம் உள்ள, ரோஸ் அவென்யூ அலுவலகம் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 15ம் தேதிக்குள் காலி செய்யும்படி, ஆம் ஆத்மிக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கெடு விதித்திருந்தது. ஆனால் கால அவகாசத்தை நீட்டித்து தரும் படி,சுப்ரீம் கோர்ட்டில் ஆம்ஆத்மியினர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய, ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், டில்லி முதல்வராகவும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தேசிய கட்சிகளுக்கு டில்லியில் அலுவலகம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கும்படி, ஆம் ஆத்மி ஆம் ஆத்மி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து