எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, நேற்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டார். 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
72 பேர் அமைச்சர்கள்...
முன்னதாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அன்றைய தினம்மொத்தம் 72 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்து உள்ளது.
முதல் கையெழுத்து...
பிரதமர் மோடி நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டார். “இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்களுக்கு சேவை...
முன்னதாக நேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவஇல், 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்ற தான் தயாராக உள்ளதாகவும். இந்தியாவை புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தனது அமைச்சரவை செயல்படும் என்றும். இளமை மற்றும் அனுபவம் கலந்த வகையில் அமைச்சரவை சகாக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |