முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது : ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பேட்டி

புதன்கிழமை, 10 ஜூலை 2024      உலகம்
Modi-Karl 2024-07-10

Source: provided

புதுடெல்லி : ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர், மோடியுடன் கார்ல் நெகம்மர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரியா அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினர்.

இந்தியா - ஆஸ்திரியா இடையே 75 ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. 1947இல் இந்தியாவின் சுதந்திரத்தை ஆஸ்திரியா அங்கீகரித்தது. இரு நாடுகளும் 1949-ல் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. அதன் மூலம் தூதரகங்களும் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், ’’எங்கள் இருதரப்பு உறவை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பல புவிசார் அரசியல் சவால்களில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றி பேச எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என பதிவிட்டிருந்தார். நெகம்மருக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஆஸ்திரியாவுக்குச் செல்வது உண்மையிலேயே பெருமைக்குரியது. நமது நாடுகளுக்கு இடையே பிணைப்பை வலுப்படுத்துவது மற்றும் புதிய வழிகளை ஆராய்வது குறித்த நமது விவாதங்களை எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதோடு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ஆஸ்திரியா அதன் துடிப்பான இசை கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது. வந்தே மாதரம் பாடலை அவர்கள் இசைப்பதை பார்க்கும்போது, அதை உணர முடிந்தது” என தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும், கடைசியாக இந்திரா காந்தி 1983 இல் பயணம் செய்தார்.

பின்னர் பிரதமர் மோடி, சான்ஸ்லர் கார்ல் நெஹாம்மருடன் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர். பிரதமர் மோடி கூறியதாவது., போர்க்களத்தில் நின்றுகொண்டு எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது, எதுவாக இருந்தாலும், அப்பாவி மக்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது, இந்தியா - ஆஸ்திரியா இடையே நல்லுறவு மட்டும் இருநாட்டு கூட்டுறவு குறித்து பேசப்பட்டது, இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி செய்யப்பட்டது என்றார். பயங்கரவாதம் குறித்துப் பேசிய பிரதமர், பயங்கரவாதத்தை இருநாடுகளுமே கண்டிக்கிறோம், பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்கக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது, அதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றார் மோடி.

சான்ஸ்லர் கார்ல் தெரிவிக்கையில்., மக்களவைத் தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்றிருப்பதன் தொடக்கத்தில், ஆஸ்திரியா வந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணம் எனக்கு வரலாற்று மற்றும் சிறப்புமிக்கதாக உள்ளது, 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா வந்துள்ளார். கார்ல் நெஹாம்மருடன் மிகவும் பயனுள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இரு நாடுகளும் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து