முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
Metro 2024-05-31

Source: provided

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று முன்தினம் (அக்.6) ஒரேநாளில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.6) இதுவரை இல்லாதவகையில், ஒரேநாளில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி அளவுக்கு அதிகமாக மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

முன்னதாக ஒருநாளில் சராசரியாக 1.70 லட்சம் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் அதிகபட்சமாக இதற்கு முன்பாக கடந்த செப். 6-ம் தேதி 3,74,087 பேர் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி, இதைக் காண பொதுமக்கள் திரண்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. மெரீனா பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதில், சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவா்களில் ஐந்து போ் உயிரிழந்தனா். அதிக வெப்பம் காரணமாக 240-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனா். அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான சாகச நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து