முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 44 பேர் வீர மரணம்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
kashmir-1

 ஜம்மு, காஷ்மீரில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களில் கத்துவா, ரஜோரி , பகுதிகளில் நடந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. துப்பறியும் நாய்கள் உதவியுடன் டிரோன்கள், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடக்கிறது. 

மழை மற்றும் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.  பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. ரஷ்மிரஞ்சன், உயர் ராணுவ அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

உதம்பூர், சம்பா, ரஜோரி, பூஞ்ச், சம்பா, லாலாசவுக் மற்றும் இதனையொட்டிய பகுதிகளில் தேடுதல் பணி நடக்கிறது. இதுவரை நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் , ராணுவ வீரர்கள் செல்லும் வாகனம் மற்றும் முகாம் மீதே அதிக தாக்குதல் நடத்தி உள்ளனர். 

மிக அருகில் வந்து தாக்குதல் நடத்துவதும், சாதுர்யமாக எவ்வித காயமுமின்றி தப்பி செல்வதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு 8 மாதங்களில் இதுவரை 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பு பணியில் உஷாராக இருக்குமாறு பாதுகாப்பு படையினர் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து