முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்புகள் நாளை ரத்து

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2024      சினிமா
Pepsi 2024 07 23

Source: provided

சென்னை : படப்பிடிப்புகளில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் பொருட்டு பெப்சி அமைப்பு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த உள்ளனர். இதை முன்னிட்டி சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரு சண்டை காட்சியை திரைப்படக் குழுவினர், படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சண்டை கலைஞரான புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த மு.ஏழுமலை (54), 20 அடி உயரத்தில் இருந்து திடீரென தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை படக் குழுவினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து விருகம்பாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி படப்பிடிப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.முன்னதாக, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படப்பிடிப்பில் கயிறு அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.

இந்த நிலையில், தொடர்ந்து சண்டைக் கலைஞர்கள் மற்றும் லைட் மேன்கள் படப்பிடிப்புகளில் உயிரிழந்து வருவதால், நாளை (ஜூலை 25) சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகளை தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தளங்களில் முறையாக பாதுகாப்பு உபகரணங்களும், ஆம்புலன்ஸ்களையும் வைத்தே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 25 அன்று சென்னை கமலா திரையரங்கில் நடத்த உள்ளனர். அன்றைய நாள் சென்னையில் நடைபெறும் பெரிய திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து