முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் எதிரொலி: 2-வது நாளாக தங்கம் விலை குறைவு

புதன்கிழமை, 24 ஜூலை 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் (ஜூலை 24) குறைந்தது.

சென்னையில் நேற்று (புதன்கிழமை) காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6490-க்கு விற்பனையானது. அதன்படி, பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.51,920-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனையானது.ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.92,000 ஆக உள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைப்பு அறிவிப்பு வெளியான உடனேயே, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550-க்கும், பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது வியாபாரிகள், நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தங்கத்தின் விலை கடுமையான ஏற்றத்தைக் கண்டுவந்தது. மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.55,240 வரை அதிகரித்து விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்து வருவதைக் கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது.

மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர். இந்த வரி குறைப்பு மூலம், வியாபாரிகளுக்கு தங்கம் விற்பனை அதிகரிக்கும். அத்துடன், பொதுமக்களும் விலை குறைப்பால் தங்கம் வாங்குவதோடு, தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து