முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஆசிய கோப்பை தொடர்: வெளியேறியது மலேசியா

புதன்கிழமை, 24 ஜூலை 2024      விளையாட்டு
Woman 2024 07 24

Source: provided

கொழும்பு : மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் மலேசியாவை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் மலேசியா அணி போட்டித் தொடரில்  இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.

191 ரன்கள் குவிப்பு...

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முர்ஷிதா 80 ரன்னும் சுல்தானா 62 ரன்களும் விளாசினர். மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

முதல் அணியாக.... 

இதனையடுத்து மலேசியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஐன்னா ஹமிசா ஹாஷிம்- வான் ஜூலியா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தில் 2-வது பந்திலேயே ஐன்னா ஹமிசா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்சா ஹண்டர் 20 ரன்னிலும் வான் ஜூலியா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காளதேசம் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பி பிரிவில் முதல் அணியாக மலேசியா வெளியேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து