முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யை முதன்மை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு மோகன் யாதவ் அழைப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      தமிழகம்
Mohan-Yadav-2024-07-25

கோவை, தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள் என ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.

வடமாநில அரசுகள், தமிழகத்தில் உள்ள தொழிலை தங்கள் மாநிலத்தில் துவக்கி, வேலை வாய்ப்பு வழங்க முயற்சிக்கின்றன. மத்திய பிரதேச மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தலைமையிலான குழுவினர் கோவையில் முகாமிட்டு, தொழில்துறையினரை சந்தித்தனர். இந்நிலையில், நேற்று கோவை வந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் அனைத்து தொழில் துறையினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது. 

தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்த ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அம்மாநிலத்தில் தொழில் துவங்குவதால் கிடைக்கும் சலுகைகள், அரசு திட்ட உதவிகள் குறித்து விரிவாக கூறினார். பின்னர், மோகன் யாதவ் பேசுகையில், 

மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள். மத்தியபிரதேச மாநிலத்தின் தொழில் வளர்ச்சி கழக அலுவலகம் கோவையில் துவங்கப்படும். தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநில தொழில்துறையினர் இணைந்து செயல்பட்டு, உற்பத்தி துறையில் மாநிலத்தை முன்னேற்றுவோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து