முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      தமிழகம்
OPS 2023-10-25

சென்னை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும்  நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமரின் தலைமையில் 27-07-2024 அன்று புது டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது என்பது தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். நிதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணிக்கும் முடிவு தமிழகத்திற்கு, தமிழக  மக்களுக்கு எதிரான செயல் என்பதில் யாருக்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.  

தற்போது தமிழகத்திற்கான திட்டங்களைத் தர மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்காக 6,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட ஏழு மடங்கு அதிகம் என்றும்  மத்திய ரெயில்வே அமைச்சர் கூறி இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் கருத்துகளை எடுத்துரைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதே பொருத்தமாக இருக்கும். இதைவிடுத்து, நிதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணிப்பது என்பது தவறான நடவடிக்கையாகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை, தமிழகத்திற்கு தேவையான நிதியினை நாம் பெற வேண்டுமென்றால்,  பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழகத்திற்கு தேவையானவற்றை அங்கே ஆணித்தரமாக முன்வைத்து அவற்றை பெற்றிட முதல்வர் முன்வர வேண்டும்.   இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து