முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆக. 8-வரை நீட்டித்து உத்தரவு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Kejriwal 2024-02-17

புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து  கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் உள்ளார். மக்களவைத் தேர்தலின் போது பரப்புரை மேற்கொள்ள  கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 

தேர்தல் நிறைவடைந்த பிறகு ஜூன் 2-ம் தேதி மீண்டும் திகார் சிறையில் சரண் அடைந்தார்  கெஜ்ரிவால். கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி திகார் சிறையிர் இருந்த  கெஜ்ரிவால் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இதனிடையே அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு கடந்த 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது  கெஜ்ரிவால் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் கஷ்டப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு சுப்ரீம் கோர்ட்  ஜாமீன் வழங்கியது. ஆனால் சி.பி.ஐ.யும்,  கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து