முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை கனமழையால் விமான சேவை பாதிப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Air

Source: provided

மும்பை:  மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிமை(ஜூலை 25)விமான பயணத்திற்கு உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு செய்தவர்களுக்கான முழு கட்டணத்தையும் திரும்பி அளிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிமை(ஜூலை 25)விமான பயணத்திற்கு உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு செய்தவர்களுக்கான முழு கட்டணத்தையும் திரும்பி அளிக்கப்படும். மேலும் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் பயணிகள் தங்கள் பயனம் செய்யும் விமான சேவை குறித்த தகவலை சரிபார்த்துக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

முந்தைய நாள், "கனமழை காரணமாக மும்பைக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் சேவை பாதிக்கப்படலாம். விமான நிலையத்தில் மெதுவான போக்குவரத்து மற்றும் தண்ணீர் தேங்குவதால் விமானங்கள் இயக்குவதில் தாமதமாகலாம், எனவே, பயணிகள் விமான நிலையத்திற்கு முன்னதாகவே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று கனமழையின் விளைவாக விமான நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்து விமான நிறுவனம் எச்சரித்திருந்தது.

முன்னதாக, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பையில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதை தொடர் மழையால் தண்ணீர் தேங்கியதைத் தொடர்ந்து வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டது. இரவில் பெய்த கனமழையால் சில பொதுப் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டதால் எண்ணற்ற பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து