முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் : சென்னையில் ஒடிசா துணை முதல்வர் புகழாரம்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Kanak-Vardhan-Singh-Dev 202

Source: provided

சென்னை : ஒடிசா மாநிலத்தில் பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அம்மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தேவ் தெரிவித்தார். 

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், எம்.எஸ்.சுவாமிநாதனின் 99-வது பிறந்த நாளையொட்டி பசி இல்லாத உலகம் என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள அறக்கட்டளை அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ஒடிசா மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தேவ் பங்கேற்று, அறக்கட்டளையின் இலட்சினை வெளியிட்டார்.  பின்னர்  அவர் பேசியதாவது, 

ஒடிசா மாநிலம் எப்போதும் புயல், பெருவெள்ளம், வறட்சி என பேரிடர்களால் பாதிக்கும் மாநிலமாக உள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஒடிசா மாநிலத்தில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் வேளாண்மை திட்டங்களை வகுத்து செயல்படுத்த அறிவுறுத்தினார்.

அதை செயல்படுத்தியதன் மூலம் பேரிடர்களால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. அவர் பேரிடரால் பாதிக்காத வகையில் சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் போன்றவற்றை பயிரிட அறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.

பிரதமர்  மோடியும் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். நடப்பாண்டு பட்ஜெட்டில் கூட வேளாண்மைக்கு கடந்த ஆண்டு விட 36 சதவீதம் அதிக நிதி ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்று  கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து