முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல்வர் ஹேமந்த் சோரன் ராகுல், கார்கேவுடன் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      இந்தியா      அரசியல்
Hemant-Soran--Rahul-2024-09

ராஞ்சி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தார்.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாயி சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த சில நாள்களுக்குப் பிறகு, கட்சியின் தற்போதைய செயல்பாடு, அதிருப்தியைத் தொடர்ந்த இந்த சந்திப்பு நேற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் கார்கே, ராகுல் காந்தியைச் சோரன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என சோரன் கோரியிருந்தாலும், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து சம்பாயி சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, ஜூலை 4ல் ஹேமந்த் சோரன் மீண்டும் முயல்வாகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து