முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      அரசியல்
Nayanar-Nagendran 2023-11-1

நெல்லை, அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே இணக்கம் ஏற்பட்டு கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சிதான் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 

நெல்லை பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே இணக்கம் ஏற்பட்டு கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சிதான். அ.தி.மு.க.வில் பெரும் பதவியில் இருந்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தேன். எனக்கு கட்சி பதவி முக்கியம் இல்லை. 

எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்த விஜயதரணிக்கு நிச்சயம் பதவி கிடைக்கும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளன. தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன. 

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் என்ன நடக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நடிகர் விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது. விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்கினால் எந்த பிரச்சினை இல்லை. 

தமிழகத்தில் எந்தவொரு கட்சி ஆரம்பித்தாலும் அதற்கு சுதந்திரம் உண்டு; கட்சி மாநாட்டிற்கு தமிழக அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து