முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்த ரவீந்திர ஜடேஜா

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      விளையாட்டு
5-Ram-54

Source: provided

புதுடெல்லி: பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா

ஓய்வு பெறுவதாக... 

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். இந்த நிலையில் ஜடேஜா தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். கடந்த 2-ம் தேதி பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பித்தார். இந்த சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இதனை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

ஜடேஜா பிரசாரம்... 

ரிவாபா ஜடேஜா கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக ரவீந்திர ஜடேஜா பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் ரிவாபா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து