முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவில் அதிர்வுகளை பதிவு செய்த பிரக்யான் ரோவர் சந்திரயான்-3 ஆய்வில் புதிய தகவல்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      இந்தியா
Pragyan-Rover 2024-09-09

Source: provided

பெங்களூரு : நிலவில் ஏற்பட்ட அதிர்வுகளை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளதாக சந்திரயான் 3 திட்டத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் அப்பல்லோ திட்டங்கள் தொடங்கியது முதல், நிலவின் தென் துருவத்தில் அதிர்வுகளை முதல்முறையாக பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதுவரை நிலவின் தென் துருவத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் குறித்த தரவுகள் எதுவும் வெளியானது இல்லை.

நிலவின் தென் துருவத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளுக்கான சமிக்ஞைகளை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், 200 அதிர்வுகள் பிரக்யான் மற்றும் பிற கருவிகளால் ஏற்பட்டது என்றும், 50 அதிர்வுகள் எதற்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 50 அதிர்வுகள் நிலவில் ஏற்பட்ட நிலநடுக்கமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாகவும், இதுகுறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரக்யான் ரோவரில் இருந்த ஐஎல்எஸ்ஏ கருவி மூலம் கிடைத்த தகவல்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தமுள்ள 250 அதிர்வுகளுக்கான சமிக்ஞைகளில் ரோவருக்கும் கருவிகளுக்கும் தொடர்பில்லாத 50 அதிர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுக்கு பிறகே முழுத் தகவல் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து