முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழா: வேளாண் துறை அமைச்சர் புறக்கணிப்பு

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      தமிழகம்
RN-Ravi 2024-09-09

Source: provided

கோவை : வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்ட நிலையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வரவேற்றார். விழாவில் மத்திய பயிர் ரகங்கள், உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திலோச்சன் மொஹபத்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் இளம் அறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மொத்தம் 9,526 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களை பெற்றனர். விழாவில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் துணை வேந்தரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்த கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து