முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமிக்கு அருகில் வரும் மிகப்பெரிய விண்கல்: இஸ்ரோ எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
ISRO 2024-09-10

பெங்களூரு, மிகப்பெரிய விண்கல் ஒன்று, பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது.

அபோபிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் விண்கல், பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாகவும் இது வரும் 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி பூமியை தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் சின்னங்களுக்கு பெயரிடுவது போல, பூமியை நோக்கி வரும் விண்கற்களுக்கும் பெயரிடப்படும். அந்த வகையில், எகிப்து நாட்டில், பிரச்னைகளுக்கான கடவுள் பெயரான அபோபிஸ் இந்த விண்கல்லுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய விண்கல், உண்மையில், பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு மிகப்பெரிய அபாயமாக இருப்பதாகவும், இதனை இஸ்ரோவின் விண்கல் கண்காணிப்பு அமைப்பானது தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும், அபோபிஸ் பூமியை மிக நெருங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு அபோபிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது மிகவும் நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது, அடுத்த விண்கல் பாதிப்பு 2029ஆம் ஆண்டில் நேரலாம், அதற்கடுத்து 2036ஆம் ஆண்டு நேரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு எந்தவிதமான ஆபத்து நேரிடலாம் என்ற கவலை எழுந்துள்ளது.பூமிக்கு, இந்த விண்கல் 32,000 கி.மீ. மேலே உள்ளது, இதுவரை இந்த அளவுக்குப் பெரிய விண்கல் பூமிக்கு அருகே வந்ததே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து