முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இலங்கை அணி புதிய சாதனை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      விளையாட்டு
Sri-Lanka 2024-07-08

Source: provided

லண்டன் : 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த இலங்கை இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

2-1 என்ற கணக்கில்... 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 219 ரன்கள் இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக சேசிங் செய்தது.

வரலாற்று சாதனை...

இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை சேசிங் செய்த முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்று சாதனையை இலங்கை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஹெடிங்லேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 180 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. இதில் இந்தியா அதிகபட்சமாக 1971-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் 173 ரன்களை சேசிங் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து