முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் விராட் கோலி முன்னேற்றம்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

துபாய், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் விராட் கோலி ஆகியோர் ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.

இந்திய வீரர்கள்...

இங்கிலாந்து - இலங்கை மற்றும் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்கள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் முறையே ஜோ ரூட், வில்லியம்சன், டேரில் மிட்செல் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோர் உள்ளனர். 5-வது இடத்தில் இருந்த ஹாரி புரூக் 7 இடங்கள் பின்தங்கி 12-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களான ரோகித், ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 5, 6 மற்றும் 7-வது இடங்களை பிடித்துள்ளனர்.

வீரர்களின் சரிவால்... 

இந்திய வீரர்கள் கடைசியாக இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடினர். அதன் பின் டெஸ்டில் விளையாடவில்லை. இருப்பினும் சில வெளிநாட்டு வீரர்களின் சரிவால் இவர்கள் விளையாடாமலேயே முன்னேறியுள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து