முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 சட்டமன்ற தேர்தல்: உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      தமிழகம்
EPS 2024-10-01

Source: provided

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்..

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 

தற்போதைய அரசியல் களம் தகவல் தொழில்நுட்பத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. இந்திய அரசியலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவை முதலில் தொடங்கியது அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வுக்கு எதிராக சில ஊடகங்களும் பத்திரிகைகளும் திட்டமிட்டு பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. 

அவற்றை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தான் முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க. மீதான அவதூறுகளை களையச் செய்யும் வலிமை தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், கடுமையான வறட்சி இருந்த போதும், பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் முதல் மின்சாரம் வரை அனைத்தும் முறையாக வழங்கப்பட்டது. 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பப் பிரிவு வலுவாகவும் உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும். முகநூல், டுவிட்டர் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து வலைதளங்களிலும் அ.தி.மு.க தகவல் தொழில் நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மிக வலுவாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை செல்போன்கள் மூலம் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். தமிழகத்தில் 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் வாக்குகள் முழுவதையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

பொய் செய்திகள் மூலம் இளைஞர்களை ஏமாற்றும் தந்திரத்தை தி.மு.க. கையில் எடுத்துள்ளது. அதை நாம் முறியடித்தாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து