முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் போராக மாறும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      இந்தியா
Jaishankar 2023 06 08

புதுடில்லி, 'மத்திய கிழக்கில் நிலவும் மோதல், பெரிய போராக மாறும் அபாயம் உள்ளது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, வாஷிங்டனில் நடந்த கலந்துரையாடலில் ஜெய்சங்கர் பேசியதாவது., இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் முழு அளவிலான போராக மாறும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியா இந்த விவகாரத்தில் விவாதங்கள் மற்றும் மத்தியஸ்தம் செய்ய முடியும். இக்கட்டான காலங்களில் தகவல் தொடர்புகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். லெபனானில் நடந்தது மட்டுமல்ல, செங்கடல் மற்றும் ஈரான், இஸ்ரேலுக்கு இடையே நடக்கும் மோதல்கள் பெரியதாக மாறி வருவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.

கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்த மோதல், பயங்கரவாத தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க வேண்டும். பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் செயல்படுவது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து