முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரிசுப்பொருட்களை பெற்றதாக புகார்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு 12 மாதம் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      உலகம்
Singapore 2024-10-03

Source: provided

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1962ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஈஸ்வரன். சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறிய இவர், 1997ம் ஆண்டு அந்த நாட்டு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 2006ல் லீ ஹெய்ன் லூங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றார். வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த இவர், தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன், அதன் பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பேன் என கூறி வந்தார்.

கடைசியில், தன் மீதான 35 குற்றச்சாட்டுகளில் 5ல் குற்றத்தை ஒப்புக் கொண்டார். கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்ட நிலையில், பரிசு பொருட்களை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மட்டும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 50 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக இத்தகைய வழக்கு பதிவு செய்யப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து