முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் டி-20 உலகக் கோப்பை: இந்தியா-நியூசிலாந்து அணிகள்துபாயில் இன்று பலப்பரீட்சை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      விளையாட்டு
3-Ram-50

Source: provided

துபாய்: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

10 அணிகள் கலந்து...

9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நேற்று தொடங்கியது . வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

துபாயில் நடக்கிறது...

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று நியூசிலாந்துடன் மோதுகிறது. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட் ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ், ஹேமலதா ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்ட்ரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ஆஷா சோபனா ஆகியோரும் உள்ளனர். 

வெல்லவில்லை... 

சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் அமெலியா கெர்,பேட்ஸ்,ஜார்ஜியா பிளிம்மர்,லியா தஹுஹு, ஜெசிகா கெர், ஈடன் கார்சன், மேடி கிரீன், பிரான் ஜோனாஸ், புரூக் ஹாலிடே, ரோஸ்மேரி மெய்ர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர். இதுவரை இந்திய மகளிர் அணி எந்த உலக கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றது. இம்முறை உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து