முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: அமெரிக்காவுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்த வடகொரியா

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      உலகம்
KIM 2024-10-08

Source: provided

பியோங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கிம் ஜாங் உன் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம்,

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தினால் எந்தவித தயக்கங்களுமின்றி எங்கள் எதிரிகளின் மீது எல்லா விதமான தாக்குதல்களையும் பயன்படுத்துவோம். அதில் அணு ஆயுதங்களுக்கும் விதிவிலக்கு இல்லை. 

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு அணுசக்தி அடிப்படையில் தங்கள் ராணுவ கூட்டணியை வலுப்படுத்த முயல்வதால் வட கொரியாவின் அணுசக்தி முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும். இது கொரிய தீபகற்பத்தின் மீதான அதிகார சமநிலையை உடைக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே பலமுறை அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக கிம் மிரட்டல்கள் விடுத்திருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய மிரட்டல் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து