முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டை விட்டு வெளியேற பின்லேடன் மகனுக்கு பிரான்ஸ் அரசு உத்தரவு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      உலகம்
France 2024-10-09

Source: provided

பாரிஸ் : பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் கடற்படை சீல்ஸ் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இளைய மகன் உமர் பின்லேடன் (48).  சவுதியில் பிறந்த  உமர்  பின்லேடன், ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த நிலையில் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டார்.   

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார் உமர் பின்லேடன்.   இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உமர் பின்லேடனுக்கு பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர்  புருனே ரீடெய்லியூ  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

உமர் பின்லேடன், சமூக வலைதளங்கள் வாயிலாக மறைமுகமாக பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிய வருகிறது.  ஏற்கனவே ஜிகாதியின் மகனாக இருப்பதால், நாட்டிற்கு ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.

தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக பிரான்ஸ் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதனை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. எனவே உமர் பின்லேடன் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து