முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்திற்கான சூழலை கண்காணிப்போம்: அமெரிக்கா

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      உலகம்
Matu-millar 2024-03-15

Source: provided

வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திர சூழ்நிலையை உன்னிப்பாக கவனிப்போம் என்று  அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன், இந்தியாவில் மத சுதந்திரம் மோசம் அடைந்து வருவதாக கூறியதுடன், குறிப்பிடத்தக்க கவலை கொள்ள வேண்டிய நாடு என பட்டியலிட வேண்டும் எனக்கூறியிருந்தது. 

இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அறிக்கை இந்தியா குறித்து பொய் தகவல்களை கூறுவதுடன், கட்டுக்கதைகளை ஊக்குவிக்கிறது. 

இதுபோன்ற அறிக்கைகளை தயாரிப்பதை விட்டுவிட்டு அமெரிக்காவிற்குள் நடக்கும் மனித உரிமை பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர் கூறியதாவது,

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷனின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது சுதந்திரமான அமைப்பு. சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பார்லிமென்டிற்கு கொள்கை பரிந்துரைகளை அளிக்கிறது. அந்த அமைப்பானது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அங்கம் அல்ல.  

கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர், குறிப்பிடத்தக்க கவலை கொள்ள வேண்டிய பட்டியலில் இந்தியாவை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறியிருந்தார். 

ஆனால், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திர சூழ்நிலையை உன்னிப்பாக கவனிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து