முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வெண்ணி காலாடி-குயிலி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      தமிழகம்
CM-2 2024-10-09

Source: provided

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் படை தளபதி வெண்ணி காலாடி, சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலித்தாய் ஆகியோரது திருவுருவ சிலைகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தளி பாளையக்காரர் வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருவுருவ சிலை ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,

2023-24-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அந்த அறிவிப்பிற்கிணங்க, தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், பச்சேரியில் வெண்ணி காலாடிக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து 2023-24-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலிக்கு சிவகங்கையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை வட்டம், ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலித்தாய்க்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் வீரத்தை போற்றி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் திருவுருவச் சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதல்வர்  மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தனம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மருத்துவர் வைத்தி நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து