முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா மாநில முதல்வராக சைனி இன்று பதவியேற்கிறார் : பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
Nayab-Singh-Saini 2024-10-1

Source: provided

பஞ்ச்குலா : சட்டமன்ற கட்சி தலைவராக  நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அரியானா மாநில முதல்வராக அவர் இன்று பதவியேற்று கொள்கிறார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் 

90 தொகுதிகள் கொண்ட அரியானாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டி பெற்றது. காங்கிரஸ் 37 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்மூலம் பா.ஜ.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. 

இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பா.ஜ.க. தொடங்கியது. முதல்வர் நயாப் சிங் சைனியே மீண்டும் முதல்வராக  பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக  நயாப் சிங் சைனி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர்  மோகன் யாதவ் மற்றும் கட்சியின் மத்திய பார்வையாளர்கள் பங்கேற்றனர். சட்டமன்ற கட்சி தலைவர் பதவிக்கு சைனியின் பெயரை எம்.எல்.ஏ.க்கள் கிரிஷன் குமார் பேடி, அனில் விஜ் ஆகியோர் முன்மொழிந்தனர். இதை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றனர்.

இதையடுத்து இன்று நடைபெறும் விழாவில் முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார்.  பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து