முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-16

Source: provided

சென்னை : சென்னையில்  எஞ்சியுள்ள 30 சதவீத  மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

சென்னையில்  தென் சென்னை பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர்  நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கிண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

மேலும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீர்நிலை அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், வேளச்சேரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  

அப்போது, ஏற்கெனவே இருந்த அப்பகுதிகளின் நிலையையும், தற்போது உள்ள நிலை குறித்து அதிகாரிகள் வரைபடங்கள் மூலம் முதல்வரிடம் விளக்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, 

நாங்கள் ஏற்கெனவே, கடந்த 3 மாதங்களாகவே சென்னையில் மழை பாதிப்புகளை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்த போதே, அதற்கான பணிகளில் இறங்கினோம்.

அந்த குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்சம், கொஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக அவற்றை செய்து முடிக்க முடியாது. அந்த பணிகள் ஓரளவு முடிந்திருக்கிறது. இன்னும் 25 முதல் 30 சதவீதம் பணிகள் பாக்கி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. 

வரக்கூடிய. காலக்கட்டத்தில், அதையும் முடித்து விடுவோம். எனவே, நிரந்தரமான தீர்வு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதி மக்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் முழு மூச்சாக மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செய்து வருகின்றனர். 

இந்த பணிகளில் ஈடுப்பட்டு வெற்றி கண்ட அத்தனை பேருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் சென்னை மாநகர மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.  ஆய்வின் போது தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தென் சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து