முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லாவுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்: பிரதமர்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்வராக  உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து சகினா மசூத், ஜாவேத் தார், ஜாவேத் ராணா, சுரிந்தர் சவுத்ரி மற்றும் சதீஷ் சர்மா ஆகிய 5 மந்திரிகள் பதிவியேற்றுக் கொண்டனர். 

 இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர்  உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு சேவை செய்வதற்கான அவரது முயற்சிகளில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். 

மேலும் ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து செயல்படும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து