எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கமுதி : தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க பசும்பொன்னிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவருக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்து கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன். இந்த நேரத்திலே அண்ணாவும், கலைஞரும் தேவர் பற்றி பெருமைப்படுத்தி குறிப்பிட்டுச் சொன்னதை நான் சொல்ல விரும்புகிறேன்.
அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் என்று அண்ணா அவரைப் பாராட்டியிருக்கிறார்.
வீரராக பிறந்தார், வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார், மறைவுக்குப் பிறகும் வீரராக போற்றப்படுகிறார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். அத்தகைய தியாகியை போற்றும் அரசாக, தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
பசும்பொன்தேவரை போற்றி தி.மு.க. அரசு செய்திருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன். மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலச் சிலை, பசும்பொன் மண்ணில் நினைவில்லம், மேல்நீலிதநல்லூர் - கமுதி - உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள்,
மதுரை ஆண்டாள்புரத்தில், முத்துராமலிங்கத் தேவர் பாலம் என்று பெயரிட்டோம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு.
கடந்த 2007-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியோடு நாம் கொண்டாடியிருக்கிறோம். அப்போது, தேவர் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில் வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது.
அணையா விளக்கும் நாம் அமைத்திருக்கிறோம். நூலகக் கட்டடம் - பால்குடங்கள் வைப்பதற்கு மண்டபம் - முளைப்பாரி மண்டபம் என்று பசும்பொன்தேவர் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.
இப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு குருபூஜை நடத்தியிருக்கிறோம். பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
மேலும் பசும்பொன் தேவரின் பிறந்தாள் விழாவின்போது ஏற்படுகின்ற கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், மழை, வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறோம்.
இதுபோன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரைப் போற்றும் செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம் என்று இந்த நேரத்தில் குறிப்பிட்டு கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:
கேள்வி:- மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மீனவர்களின் கைது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது பற்றி.
பதில்:- தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம்.
அவர்களும் அவ்வப்போது, நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது.
கேள்வி:- தேவர் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக..
பதில்:- அதற்கு தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். இப்போது கூட 12 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.
கேள்வி:- காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது . அதுபற்றி..
பதில்:- 2008-ம் ஆண்டு தான் காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்டப் பணி கதவனையிலிருந்து துவக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டுவைத்திருந்தார்கள். கடைசி வருடத்தில் தான் அதை செய்யப்போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்தார்கள்.
அதையும் கொரோனா பெருந்தொற்று வந்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது 40 சதவிகிதம் வரை நிலஎடுப்பு பணிகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2024.
30 Oct 2024 -
மற்றொரு தாக்குதலை நடத்தினால் பதிலடி மிக,மிக கடுமையாக இருக்கும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
30 Oct 2024டெல் அவிவ் : இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலின் ராணுவ
-
ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு
30 Oct 2024புதுடெல்லி : உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியூயார்க்கில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
30 Oct 2024நியூயார்க் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது
-
கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
30 Oct 2024சென்னை : கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர்
30 Oct 2024லாகூர் : உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் எட்டியுள்ளது.
-
2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
30 Oct 2024சென்னை : 2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திடீர் வெள்ளம்: ஸ்பெயினில் 51 பேர் பலி
30 Oct 2024மாட்ரிட் : ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
-
டீலர் கமிஷன் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் : மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்
30 Oct 2024புதுடெல்லி : பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ.
-
எல்லையில் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை: இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு
30 Oct 2024வாஷிங்டன் : எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன்: தனது குழந்தைகளுக்காக வாங்கிய எலான் மஸ்க்
30 Oct 2024வாஷிங்டன் : டெக்ஸாசில் எலான் மஸ்க் தனது குழந்தைகளுக்காக 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பெங்களூருவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு சிகிச்சை
30 Oct 2024பெங்களூரு : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார்.
-
முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா: பசும்பொன் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை
30 Oct 2024கமுதி : முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையணிவித்து மரி
-
தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
30 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
நீட் நுழைவு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் : மத்திய அரசுக்கு சீரமைப்பு குழு பரிந்துரை
30 Oct 2024புதுடெல்லி : நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.
-
மும்பையில் தீபாவளி கொண்டாட்டம்: மனைவியுடன் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ பங்கேற்பு
30 Oct 2024மும்பை : மும்பையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தன் மனைவி பெகோனா கோமஸ் உடன் பங்கேற்றார்.
-
ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
30 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா?- ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
30 Oct 2024சென்னை : போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு 20 நாட்களாகியும் இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை.
-
இன்று தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
30 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
30 Oct 2024சென்னை : மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
சமூக நல்லிணக்கம் பேணியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் : த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்
30 Oct 2024சென்னை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சமூக நல்லிணக்கம் பேணியவர்.
-
கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்
30 Oct 2024பெங்களூரு : கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
-
தீபாவளி பண்டிகை: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Oct 2024சென்னை : இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க.
-
பிரான்ஸ் தூதரிடம் கைவரிசை: டெல்லியில் 4 திருடர்கள் கைது
30 Oct 2024புதுடெல்லி : டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி சவுக் சந்தையில், பிரான்ஸ் துாதர் தியரி மாத்துவிடம் மொபைல் போனை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
30 Oct 2024மதுரை : மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.