முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீலர் கமிஷன் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் : மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      இந்தியா
Hardeep-Singh-Puri 2024-10-

Source: provided

புதுடெல்லி : பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விலை குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

பெட்ரோல் பங்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்புகளை இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. 

இவ்வாறு உயர்த்தப்பட்ட கமிஷன் இன்று முதல் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பதிவுகளை மேற்கோள்காட்டி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் அதில் 88 ஆயிரம் பெட்ரோல் பங்குகளின் 7 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அதன்படி ஒடிசாவில் பெட்ரோல் விலை ரூ. 4.69 காசுகள் குறை வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு வழங்க வேண்டிய டீலர் கமிஷனை அதிகரிப்பதற்கான எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். 

நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. (தேர்தல் நடத்தப்படும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் முடிவு பின்னர் செயல்படுத்தப்படும்). இந்த அறிவிப்பு காரணமாக ஒடிசாவின் மல்கங்கிரியில் உள்ள குனன்பல்லி மற்றும்  கலிமேலாவில் பெட்ரோல் விலை ரூ.4.69 மற்றும் ரூ. 4.55 குறையும். டீசல் விலை முறையே ரூ. 4.45 மற்றும் ரூ. 4.32 குறையும். 

இதேபோல், சத்தீஸ்கரின் சுக்மாவில் பெட்ரோல் விலை ரூ. 2.09 ஆகவும், டீசல் விலை ரூ. 2.02 ஆகவும் குறையும். டீலர் கமிஷன் அதிகரிப்பு, நாட்டிலுள்ள எங்கள் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தினமும் வரும் சுமார் 7 கோடி குடிமக்களுக்கு எரிபொருள் விலையை அதிகரிக்காமல் சிறந்த சேவையை வழங்கும்.

கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது, நாடு முழுவதும் உள்ள 83,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பம்புகளில் பணிபுரியும் பெட்ரோல் பம்ப் டீலர்கள் மற்றும் கிட்டத்தட்ட 10 லட்சம் ஊழியர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து