முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது : ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேச்சு

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      உலகம்
Trump 2024-11-06

Source: provided

வாஷிங்டன் : இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என்று புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசினார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார்.   அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார். ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி.  

இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது.  47-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி.  இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன். 

அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை அளித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. 

அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளை தீர்ப்பேன். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து