முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      இந்தியா
Modi-Trump 2024-03-18

Source: provided

புதுடெல்லி : 47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதிபர் தேர்தலில் டிரம்ப்  வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள், பிரதமர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் , அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்பிற்கு வாழ்த்துகள்.  இந்தியா - அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன். 

நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் பாடுபடுவோம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து