முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடக்க ஆட்டக்காரராக சாம்சன்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய நிலையில், இந்திய அணி விளையாடவுள்ள அடுத்த 7 டி20 போட்டிகளில் முடிவுகள் எப்படி வந்தாலும், தன்னை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப் போவதாக சூர்யகுமார் யாதவ் கூறியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் கூறியதாவது: துலிப் கோப்பை தொடரில் விளையாடியபோது, சூர்யகுமார் யாதவ் என்னிடம், உங்களுக்கு அடுத்து 7 போட்டிகள் இருக்கின்றன. அந்த 7 போட்டிகளிலும் நீங்கள்தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போகிறீர்கள். 

என்ன ஆனாலும் உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்றார். எனது கிரிக்கெட் பயணத்தில் எனக்கு முதல் முறையாக நன்றாக தெளிவு கிடைத்தது. அவரது அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையளித்தது. நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் என்பதில் அணி நிர்வாகமும் தெளிவாக இருந்தது. எனது நாட்டுக்காக எந்த விதத்தில் என்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கலாம் என்பதில் மட்டுமே நான் தற்போது கவனம் செலுத்த வேண்டும். நான் சிறப்பாக செயல்பட்டதற்கு பின்னால் நிறைய கடின உழைப்பு இருக்கிறது. கடந்த 9-10 ஆண்டு கால காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது. தற்போது நடக்கும் விஷயங்களை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

_________________________________________________________________________________

ஆஸ்திரேலியா ஏ அபார வெற்றி

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி(4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்சில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ தனது முதல் இன்னிங்சில் 223 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சில் 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 68 ரன் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஏ 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏ கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து