முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 4 பணிக்கான சான்றிதழ்களை நவ.21 வரை பதிவேற்றம் செய்யலாம் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
TNPSC 2023-04-20

Source: provided

சென்னை : குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வினை 15.80 லட்சம் பேர் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் அக். 28-ல் வெளியிடப்பட்டது. கிராம நிர்வாக உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், 559 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரிக்கப்பட்டது.

கடந்த நவ. 7-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி. இணைய தளம் மூலம் கணினி வழித்திரை சரிபார்ப்புக்கு நவ. 9 முதல் 21 வரை பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து