முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: குஜராத்தில் ஈரானியர்கள் 8 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
Gujarat 2024-11-15

காந்திநகர், குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருளுடன் 8 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே உள்ள கடற்பகுதியில் போலீசார், கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரின் கூட்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகில் இருந்து 700 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப்பொருளை கடத்த முயன்ற 8 ஈரானியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் அதிகளவிலான போதைப்பொருள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் இல்லாத பாரதத்திற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நேற்று நமது அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்து தோராயமாக கைப்பற்றியது. குஜராத்தில் 700 கிலோ கடத்தல் போதைப்பொருளை குஜராத் கடற்படை, போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நமது அதிகாரிகளுக்கு இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து