முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்: 15 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் காலணி தொழிற்சாலைக்கும் அடிக்கல்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-11-15

அரியலூர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடக்கிவைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். பின்னர் அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வருகை தந்துள்ளதையடுத்து, பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து