Idhayam Matrimony

ஐ.பி.எல். 2025: மெகா ஏலம்: 13-வயது வீரருக்கு இடம்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      விளையாட்டு
IPL 2024-11-16

Source: provided

புதுடெல்லி : வைபவ் சூர்யவன்ஷி  ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன 4-வது வீரர் என்ற சாதனை படைத்த நிலையில் தற்போது ஐ.பி.எல். 2025 மெகா ஏலத்தில் இடம் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.

மெகா ஏலம்... 

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஏலத்திற்கு மொத்தம் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அந்த பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் தேவை, விருப்பம் அடிப்படையில் ஆயிரம் வீரர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 574 பேர் கொண்ட இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இவற்றில் 366 பேர் இந்தியர்கள், 208 வீரர்கள் வெளிநாட்டவர் ஆவர். இவர்களில் 241 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள்.

13 வயதே ஆன... 

இந்த பட்டியலில் பீகாரை சேர்ந்த 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.30 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக குறைந்த வயதில் ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவர் ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன 4-வது வீரர் என்ற சாதனை படைத்தவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து