முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வருடத்தில் 3 சதங்கள்: சஞ்சு சாம்சன் சாதனை

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

ஜோகன்னஸ்பர்க் : சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்று மாபெரும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.

இவ்விரு அணிகள்... 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங்... 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் 283 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வெறும் 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 148 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பாண்டில்...  

முன்னதாக இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் டி20 கிரிக்கெட்டில் நடப்பாண்டில் (2024) அவரது 3-வது சதமாக பதிவானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து