முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. தொடரில் பங்கேற்பாரா? - சுப்மன் கில்லுக்கு காயம்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

பெர்த் : பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுற்றுப்பயணம்.... 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

உடனடியாக... 

இந்த நிலையில் ,பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு திடீரென முழங்கையில் காயம் ஏற்பட்டது . இதனால் களத்தில் இருந்து அவர் உடனடியாக வெளியேறினார். இரு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து