முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்திய ஜாக்பாலுக்கு ரூ.338 கோடி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      விளையாட்டு
MikeTyson-JakePaul 2024-11-

Source: provided

டெக்ஸாஸ் : குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேக் பால் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.338 கோடி பரிசுதொகை வழங்கப்பட்டது.

27 வயதான... 

அமெரிக்காவில் 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்தவர் மைக் டைசன் (வயது 58). இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இந்தநிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குத்துசண்டையில் மைக் டைசன் நேற்று களம் இறங்கினார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 27 வயதான குத்துசண்டை வீரர் ஜேக் பாலை எதிர்த்து நேற்று போட்டியிட்டார். 

278 முறை தாக்க...

8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் ஜேக் பால் 278 முறை மைக் டைசனை தாக்க முயன்றார். அதில் 78 தாக்குதல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மறுபுறம் மைக் டைசன் 97 முறை மட்டுமே ஜேக் பாலை தாக்க முயன்றார். அதில் 12 தாக்குதல்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.இரண்டு நடுவர்களில் ஒருவர் 80 - 72 எனவும், மற்றொருவர் 79 - 73 எனவும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை வழங்கினார்கள். இந்த நிலையில், மைக் டைசனை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜாக் பாலுக்கு ரூ.338 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது . தோல்வியடைந்த டைசனுக்கு ரூ.169 கோடி வழங்கப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து