முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக நாக்பூரில் கங்கனா ரோட் ஷோ

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      இந்தியா
Kangana-ranaut-2024-11-17

Source: provided

நாக்பூர் : நாக்பூர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் ரோட் ஷோ பிரசாரம் நடத்தினார்.

288 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தோ்தலில், ஆளும் கூட்டணியில் பா.ஜ.க.வும் (148), எதிரணியில் காங்கிரஸும் (103) அதிக இடங்களில் போட்டியிடுகின்றன.

அதேநேரம், பெரும்பான்மைக்கு தேவையான (145) தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. மட்டுமே போட்டியிடுகிறது. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாக்பூர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பிரவின் தட்கேவுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் ஞாயிற்றுக்கிழமை ரோட் ஷோ பிரசாரம் நடத்தினார்.

நகரின் பெங்காலி பஞ்சா பகுதியில் இருந்து ரோட் ஷோவை அவர் தொடங்கினார். மேலும் நாக்பூர் மேற்கு தொகுதியிலும் அவர் ரோட் ஷோ நடத்துகிறார். பிரவின் தட்கே, பா.ஜ.க. நகரப் பிரிவின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து